இரவு நேரங்களில் சாலைகளில் உலாவரும் சிறுத்தைகள் !! புதர்களை அகற்றுவார்களா.. அதிகாரிகள்!!

  -MMH

   கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள ரொட்டிக்கடை வனத்து சின்னப்பர் ஆலயம் பகுதியில் உள்ள மின்சார வாரியம் மயான குறை பகுதிகளில் புதர்கள் செடிகள் அமைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் சிறுத்தைகள் பதுங்கி உள்ளது. இரவு நேரங்களில் அவ்வழியே வரும் வாகன ஓட்டுனர்கள் மிகுந்த பயத்துடன் வந்து செல்கின்றனர். அதேபோல் ரொட்டிக் கடை பகுதிகளிலும் சிறுத்தைகள் கரடிகள் அதிகளவில் மக்களை அச்சுறுத்தும் வகையில் உலாவருகிறது.  அப்பகுதி மக்கள் கைபேசி மூலமாகவும் போட்டோஸ் வீடியோக்களை எடுத்து வாட்ஸ்அப் மூலமாகவும் எச்சரிக்கை கொடுக்கிறார்கள். அப்பகுதிகளில் கூண்டு வைத்து  மக்களை அச்சுறுத்தும் விலங்குகளை பிடிக்க வனவிலங்கு அதிகாரிகளிடம் கூறியும் மனு கொடுத்தும் அவர்கள் கண்டு கொள்வதில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.


நாளைய வரலாறு செய்திக்காக,

-திவ்ய குமார், வால்பாறை.

Comments