பொள்ளாச்சி அருகே கணவன் விட்டுச் சென்ற வருத்தத்தில், மனைவி தூக்கிட்டு தற்கொலை !!

-MMH 

            பொள்ளாச்சி ஆனைமலை அடுத்த தமிழக-கேரள எல்லைப் பகுதியான மீனாட்சிபுரம், பேருந்து நிலையம் அருகே அப்துல்லா என்பவரின் மாடி வீட்டில் ராமராஜ், அனிஷா என்ற தம்பதியினர் தன்  இரு குழந்தைகளுடன் வசித்துவந்தனர்.

இந்நிலையில் டெம்போ டிரைவராக இருந்து  ராமராஜனுக்கு இதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் இருப்பதாக கூறப்பட்டு வந்தது இதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்தப் பெண்ணுடன் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது இதனால் மன உளைச்சலுடன் இருந்து வந்துள்ளார் அனிஷா. இவருடைய மனக் கவலையைப் போக்க தாயார் கமலம் இவருடன் இருந்து வந்துள்ளார். 

நேற்று காலை கமலம் தன் பேரக் குழந்தையுடன் தனது சொந்த ஊரான நெல்லிமேடு அடுத்த கன்னிமாரி  சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியுள்ளார்.  அப்பொழுது கதவு உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்துள்ளது இதனையடுத்து கதவை வெகுநேரம் தட்டியும் திறக்கப்படவில்லை இதனையடுத்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று உள்ளே பார்த்த பொழுது விட்டத்தில் தூக்கு மாட்டிய நிலையில் அனிஷா பிணமாக தொங்கிய நிலையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து ஆனைமலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது விரைந்து வந்த காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும்  தற்கொலைதான் என்று உறுதிப்படுத்திய நிலையில் மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ஆனைமலை  காவல்துறையினர்.

தமிழக துணை தலைமை நிருபர், பொள்ளாச்சி, 

-M.சுரேஷ்குமார்.

Comments