கடலூரில் சம்பா நெல் சாகுபடி; வேளாண் அதிகாரி ஆறுமுகம் விளக்கம்...!!

   -MMH

   விவசாயிகள் நலனுக்காக புதுமுறை பயிற்சி கடலூரில் சம்பா நெல் சாகுபடியில் தொழில் நுட்பங்கள் குறித்து வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் ஆறுமுகம் தலைமையில் விவசாயிகள் கலந்துரையாடினர்.

கடலூர் மாவட்டத்தில் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் சம்பா நெல் சாகுபடியில் உயர் விளைச்சல் தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளிடம்,  கொரோனா வைரஸ் தொற்று தவிர்க்கும் வகையில் அரங்க கூட்டத்திற்கு பதிலாக தொலைபேசி வழி நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் ஆறுமுகம் கலந்து கொண்டு கடலூர் மாவட்டத்திற்கு ஏற்ற நெல் ரகங்கள், நேரடி விதைப்பு, நடவு மேலாண்மை, நீர் மேலாண்மை, இயந்திர நடவு, உரம் மேலாண்மை, நோய் மேலாண்மை, பூச்சி மேலாண்மை, இயற்கை விவசாயம், எலியை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார்.

ரிலையன்ஸ் அறக்கட்டளை மேலாளர் மெய்கண்டன்

இந்த நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்ட கடலூர் மாவட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாட்டை ரிலையன்ஸ் அறக்கட்டளை மேலாளர் மெய்கண்டன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

மேலும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் சேவைகளை பயன் படுத்திக்கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 4198 800 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. 

விவசாயிகள் நலனுக்காக ரிலையன்ஸ் அறக்கட்டளையினரும் வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் ஆறுமுகம் தலைமையில் அதிகாரிகள் மேற்கொண்ட நூதன முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர், 

-மலர் மன்னன்.

Comments