என் கூட வந்து வாழ மாட்டியா 'கடுப்பான' கணவன்..!! மனைவிக்கு சொந்தமான வாகனங்களை தீவைத்து கொளுத்திய சம்பவம்..!!!

 

-MMH

     கோவை சேரன்மாநகர் அடுத்துள்ள காந்திமா நகர் பகுதியில் சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்த மனைவியின் வாகனங்களை தீவைத்து கொளுத்திய கணவர் போலீசார் விசாரணை. கோவை காந்தி மாநகரில் வசிக்கும் மாரியப்பன் என்பவருடைய மகள் தேவி பிரியா  வயது 35. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தேவிபிரியாவின் கணவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

ஆகவே  இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்த தேவிப்பிரியா  கடந்த 5  ஆண்டுகளுக்கு முன்பு முகமது ரபீக்  என்னும்  பாபுவை திருமணம் செய்துள்ளார். சில காலமாக இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில் தேவிப்பிரியா  கணவரை பிரிந்து சொந்தமாக காய்கறி வியாபாரம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். 

சம்பவத்தன்று நேற்று முகம்மது ரபீக்  என்னும் பாபு தேவிபிரியாவின் வீட்டுக்கு சென்று தன்னுடன் வந்து வாழவேண்டும் என்று அவரை கூப்பிட்டு உள்ளார், வரவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்றும்  மிரட்டியுள்ளார். இருப்பினும் அவர் மிரட்டலுக்கு அஞ்சாத  தேவிப்பிரியா அவருடன் போக மறுத்துள்ளார். நான் இவ்வளவு தூரம் கூப்பிடும் நீ வரமாட்டியா என்று கடுப்பான  கணவர் பாபு தேவி பிரியாவுக்கு சொந்தமான  காய்கறிகளே ஏற்றி விற்பனை செய்ய பயன்படுத்தும் இரண்டு வாகனங்களை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தினார். வாகனங்கள் முழுவதுமாக எறிந்து  சேதமாகின. இதைப்பற்றி தேவிப்பிரியா பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளை வரலாறு செய்திக்காக,

-முகம்மது சாதிக் அலி.

Comments