முத்துசாமிபுதூர் ஆற்றுப்பாலத்தில் பாலத்திற்கு மேல் தண்ணீர், பொதுமக்கள் பாதுகாப்புடன் பயணிக்க அறிவுறுத்தல் !!

-MMH

      கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆழியார் அணை முழு கொள்ளளவை எட்டியதால் நேற்று  அணையிலிருந்து 730 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக கேரள எல்லைப் பகுதியான மீனாட்சிபுரம் அடுத்த முத்துசாமிபுதூர் பகுதியிலுள்ள தரை பாலத்தில் பாலத்திற்கு மேல் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் மக்கள் இந்தப் பாதையை பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் பயன்பாட்டிற்காக மூலத்துறை அணைக்கட்டின் இரு பகுதியில் உள்ள மெயின் கேட் திறந்து விடப்பட்டுள்ளது மக்கள் இந்த வழித்தடத்தை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் ஆற்றில் தண்ணீர் அதிகரித்து வருவதால் ஆற்றுக்கு யாரும் குளிக்கச் செல்ல வேண்டாம் என்றும் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

-M.சுரேஷ்குமார்.


Comments