வருமான வரி தாக்கல் செய்ய ஆசிரியர்களுக்கு இ-பைலிங் பயிற்சி! தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நடத்தியது!

 

-MMH

        சிவகங்கை: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்ட அமைப்பு சார்பாக வருமான வரி தாக்கல் செய்ய வசதியாக ஆசிரியர்களுக்கு இ-பைலிங் பயிற்சி நடத்தப்பட்டது. பயிற்சிக்கு மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் பயிற்சியின் நோக்கங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். வருமானவரியை முறையாக தாக்கல் செய்வது எப்படி என்பது குறித்து மாநில துணைத்தலைவர் ஆரோக்கியராஜ் விளக்கினார். 

இ-பைலிங் செய்வது எவ்வாறு என்பது குறித்து ஆன்லைன் புரஜெக்டர் மூலம் திரையில் கமல்ராஜன் மற்றும் சரவணன் பயிற்சி அளித்தனர். பயிற்சியில் மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி, மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஞான அற்புதராஜ், குமரேசன், கல்வி மாவட்ட தலைவர் ஜோசப் கல்வி மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் மாவட்ட துணை நிர்வாகிகள் மாலா, ரவி, அமலசேவியர், ஜான் அந்தோணி, உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் இருந்து 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

வருமான வரித்துறையை பொறுத்தவரை இ-பைலிங் ஜூலை 31ம் தேதிக்குள் தாக்கல் செய்து முடிக்க வேண்டும். தற்போது கொரேனா பெருந்தொற்று காலம் என்பதால் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இங்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மாவட்டம் முழுமைக்கும் உள்ள 1500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இ-பைலிங் செய்வதற்கு தனியார் மையங்களை நாட வேண்டியிருந்தது. இதனால் ஆசிரியர்களுக்கு பணத்துடன், கால விரயமும் ஆனது. இ-பைலிங் செய்யாத ஆசிரியர்களுக்கு வருமான வரித்துறை அபராத நோட்டீஸ் அனுப்பி வந்தது. இந்த பயிற்சியின் மூலம் அனைத்திற்கும் தீர்வு ஏற்பட்டுள்ளதாக பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

-அப்துல்சலாம் திருப்பத்தூர்.

Comments