நிஜம்!! சிட்டிசன் திரைப்படத்தில் வருகிற அத்திப்பட்டி கிராமம் போல இதோ ஒரு உண்மையான சம்பவம்!!

  -MMH

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா, வத்தலக்குண்டு அருகே உள்ளது "எழுவணம்பட்டி"எனும் கிராமம். ஊரையே அடிச்சு உலையில போட்டதற்கு உதாரணமாகி ரணமாகிப் போனது இந்த ஊர். ஊர் குடிக்கும் தண்ணீரில் வேர்பிடித்தது விஷம். என்ன நடக்கிறது அங்கே? இந்த கிராமத்தில் தான் 5 வருடமாக விவசாய குடிநீர் கெமிக்கலாக முற்றிலும் மாறிவிட்டது. நெல், கரும்பு கடலைப்பயறு, தென்னை, வாழை, என அனைத்தும் விளையாமல் நாசக்கேடு ஆகிவிட்து, இதற்கு காரணம் திருப்பூரில் அடியோடு அடித்து விரட்டப்பட்ட சரவணா கெமிக்கல் ஆலை(Ssm fine yarns).

கடந்த 2004ஆம் ஆண்டு ஊர் மக்களுக்கு பள்ளிக்கூடத்தில் ஒரு நாள் இலவச வைத்தியம் எனக்கூறி அப்பாவி மக்களிடம் கையெழுத்து வாங்கினார்கள், அதை டெல்லி ISOவில் இப்பகுதி ஏற்கனவே மாசு குடிநீர் வறண்ட பூமி, என ஒப்புக் கொண்டதாக பதிந்து முதல் முதலாக 450 ஏக்கர் பரப்பளவு நிலத்தை அப்பாவி விவசாயிகளிடம் சொர்ப்ப விலைக்கு அடித்து பிடுங்கி சுற்றி மாங்கன்று நட்டு அதன் மறைவில் சாயப்பட்டறை ஆரம்பித்தனர். இதில் உள்ளூர் இளைஞர்களை வேலைக்கு எடுப்பதில்லை, நாட்கள் கடந்தன விவசாயம் முற்றும் பாதித்தது,        

கருவுற்ற பெண்களுக்கு குறைப் பிரசவம், குழந்தைகள் மூளை வளர்ச்சி மனக்கோளாறு உடல் ஊனத்துடன் பிறந்தனர், பின்பு மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக புகார் அளித்தனர், அதன் அடிப்படையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்  தண்ணீரை ஆராய்ந்தனர், 97சதவிகிதம் கெட்டுப்போனதாக கூறி இதற்கு தீர்வாக சென்னை உச்ச நீதிமன்றத்தில் 3வருடமாக வழக்கு நடந்தது இதில் ஆலைக்கு சாதகமாக பிரபல வழக்கறிஞர் பெட்டிகளை வாங்கிக்கொண்டு வாதாடினார். இதன் மூலம் சென்ற மாதம் தீர்ப்பானது அதில் ஊர் மக்கள் ஏற்கனவே வறண்ட பூமி என ஆதரம் கொடுத்துள்ளதாகவும்  மேலும் கழிவு நீர் சுத்திகரிப்பு வைத்து ISO ஆதாரம் கொடுத்ததால் ஆலையை மூட முடியாது எனவும், விவசாயிகளுக்கு தண்ணீர் பிற்காலத்தில் மாறுபடும் எனவே நஷ்ட ஈடு எதும் தர தேவை இல்லை என உத்தரவிட்டது. சாதாரண விவசாய மக்கள் முன்னால் பணமே வெற்றியானது மாடுகள் ஆடுகள் தோட்ட  தண்ணீரை குடிப்பதில்லை, எங்கள் ஊரில் உள்ள அனைவரும் தினமும் கூலி வேலை செய்து பிழைப்பை நடத்துபவர்கள் எங்களால் வாழ்க்கை நடத்த முடியவில்லை. மாவட்ட அதிகரிகளும் கை விட்டனர்.

ஏற்கனவே விவசாயிகளின் வயித்தெறிச்சலில் Ssm fine yarns MD கிருஷ்ணசாமி கவுண்டர் கக்கூஸில் வழுக்கிவிட்டு இறந்துவிட்டார் இனி CE திண்டுக்கல் சாலையில் எப்போது இறப்பார் என்று தெரியாது. அதற்குள் ஆலைக்கு சீல் வைக்க வேண்டும், விவசாயத்தை அழிப்பவனை எவனையும் விடக்கூடாது எங்களுக்கு உங்களை விட்டால் வேறு வழி தெரியவில்லை. போராட்டம் செய்தாலும் அதை ஒரு மணி நேரம் கூட நடத்த விடுவதில்லை. எங்கள் ஊரில் உள்ள பகுதி மக்கள் ஏற்கனவே பிழைப்பு நடத்த வெளியூர் சென்று விட்டனர். மீதம் உள்ள மக்களை காப்பாற்ற உங்களை நாடி உள்ளோம் ..plz நீங்கள் செய்ய வேண்டியது ஒரு ஷேர் மட்டுமே எல்லாருக்குமே தெரியும் இந்திய சட்டத்திட்டத்தின் படி whatsapp ல் 1,50,00,00 பேரால் ஒரு பதிவு ஷேர் செய்ய பட்டால்  போதும் மத்திய உளவு துறையில் ஒரு கவனத்தை திசை திருப்பும் அதுமட்டும் இல்லாமல் இந்திய அளவில் விவசாயதண்ணீர் பிரச்சனையை தீர்க்க ஒரு குழு அமைக்கப்படும் அவ்வாறு அமைக்கப்பட்டால் அது தமிழ்நாட்டுக்கு நன்மையே.

சமுதாய சிந்தனை உடைய மக்களில் ஒருவனாக,

நாளைய வரலாறு செய்திக்காக,

-பாஷா, திருப்பூர்.

Comments