கருகிப்போன தோசையவா தரே. என்ன பண்றேன் பாரு!! ஆத்திரத்தில் கணவன் எடுத்த முடிவு!!

   -MMH

கோவை சிங்காநல்லூர் S. I. H. S காலனியில் மனைவி சுட்ட தோசை கருகியதால் ஆத்திரமடைந்த கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிங்காநல்லூர்  S. I. H. S காலனி, நாராயணசாமி நகரை சேர்ந்தவர் பழனி, வயது 52, கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி மாதவி. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் காலை பழனி அவரது வீட்டில் தோசை சாப்பிட்டுக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவர் மனைவி சுட்ட ஒரு தோசை கருகி விட்டது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அது தகராறில் முடிந்தது. மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பழனி வீட்டில் இருந்த ஒரு அறைக்குள் சென்று கதவை சாத்தி பூட்டிக் கொண்டார். 

வெகு நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவர் குடும்பத்தார் ஜன்னல் வழியாக பார்த்தபோது பழனி தான் கட்டியிருந்த வேஷ்டியை பயன்படுத்தி தூக்கிட்டு கொண்டுள்ளார். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனே சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கவே விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்து பழனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவத்தை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். "என்ன கொடுமைங்க ஒரு தோசை கருகி போச்சுன்னா இன்னொரு தோசை சுட்டுகலாம், ஆனால் உயிர் போனால் திரும்ப வருமா இத எங்கநாள  ஜீரணிக்கவே முடியலைங்க" என்று அக்கம் பக்கத்தினர் புலம்பித் தள்ளுவது மனதுக்கு வேதனை அளிப்பதாக உள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-முஹம்மது சாதிக் அலி, அன்னூர்.

Comments