தாய்-மகள் கூட்டணி போட்டு மோசடி செய்த சம்பவம், கோவை மாநகர போலீசார் நடவடிக்கை !

 

-MMH

    கோவை கவுண்டம்பாளையம் ராஜன் நகரை சேர்ந்தவர் கீதா (வயது38) . இவர் கோவை காட்டூர் காவல்துறையில் புகார் மனு அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கோவை காட்டூர் ராம்நகர் காளப்பன் தெருவில் என்னுடைய பெற்றோர் வசித்து வருகின்றனர். இருவரும் புற்றுநோயால் அவதிப்படுகிறார்கள். அவர்களை பார்க்க அடிக்கடி வீட்டுக்கு செல்லும்போது, எனக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த மேரி மற்றும் அவருடைய மகள் ஜூலியானா ஆகியோர் பழக்கம் ஆனார்கள்.

இந்தநிலையில் என்னுடைய பெற்றோரின் மருத்துவ செலவுக்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப்பட்டது. அதற்கு மேரி மற்றும் அவருடைய மகள், வங்கியில் நகை கடன் வாங்கி தருவதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து என்னுடைய தாயை வங்கிக்கு அழைத்துச்சென்ற அவர்கள். எனது தாயின் வங்கி கணக்கில் இருந்த ரூ.8.8 லட்சம் மற்றும் நகை கடன் பெற வாங்கிய 22 பவுன் தங்கநகை ஆகியவற்றை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்துவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதன்பேரில் காட்டூர் போலீசார் மேரி, அவருடைய மகள் ஜூலியானா ஆகிய இருவர் மீதும் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய இருபிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments