பக்கவிளைவில்லாத பாட்டி வைத்தியம்!!

  -MMH

  *வாழை தண்டை எரித்து அந்த சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தீப்புண் உள்ள இடத்தில் போட்டு வர விரைவில் தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் ஆகியவை குணமாகும்.

*கருணைக் கிழங்கை கொஞ்சம் எடுத்து அதனுடன் சிறிதளவு துவரம் பருப்பு சேர்த்து சாம்பார் வைத்து சாப்பிட்டு வர மூல பிரட்சனைகள் குணமாகும்.

*வெள்ளை பூண்டை வெற்றிலையுடன் சேர்த்து அரைத்து தேமல் உள்ள இடத்தில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

*கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் நன்றாக காயவைத்து பொடி செய்து, தினமும் சோப்புக்கு பதிலாக உடம்புக்கு தேய்த்து குளித்தால் சரும நோய்கள் குணமாகும்.

*சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் ஆகியவற்றை சம அளவு எடுத்து வடித்த கஞ்சியில் சேர்த்து மீண்டும் சுடவைக்கவும் பின்பு அவற்றை மூச்சிப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேலை தடவினால் மூச்சிப்பிடிப்பு குணமாகும்.

கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி தினமும் பூசி வர பித்த வெடிப்பு விரைவில் குணமாகும்.

செம்பருத்தி இலையை காய வைத்து பொடி செய்து தினமும் சாப்பிட மலச்சிக்கல் குணமாகும்.

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட வயிற்று வலி குணமாகும்.

மருத்துவ சிந்தனையோடு, 

-திருமதி சுகன்யா சுரேஷ்.

Comments