பான் கார்டு, ஏடிஎம் கார்டு செல்லாது - எஸ்பிஐ அதிரடி உத்தரவு!!

-MMH

     செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க வேண்டியது கட்டாயம் என எஸ்பிஐ வங்கி மீண்டும் அறிவுறுத்தியுள்ளது . படிப்படியாக அனைத்து சேவைகளுக்கும் ஆதார் கார்டுகள் கட்டாயமாக்கப்பட்டு வருகின்றன . குறிப்பாக , பான் கார்டு வைத்திருப்பவர்கள் அதை ஆதாருடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது .

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது 44 கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்களை இந்த விஷயத்தில் எச்சரித்து ள்ளது . வாடிக்கையாளர்கள் அனைவரும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் தங்களது ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளது . ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைக்கப்படாவிட்டால் அந்த பான் கார்டு செல்லாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .

-Ln இந்திராதேவி முருகேசன், மகுடஞ்சாவடி கலையரசன்.

Comments