கோவிலில் அகல் தீபம் ஏற்றும் பொழுது பழைய அகல் விளக்கைப் பயன்படுத்தலாமா கூடாதா மற்றவர்கள் பயன்படுத்திய விளக்குகளை நாம் பயன்படுத்தினால் என்ன நடக்கும் !!

 

-MMH

   இறை வழிபாட்டில் மிகவும் முக்கியமானது அகல் தீபம் ஏற்றுவது ஆகும் நீங்கள் மண் அகல் விளக்கு ஒன்றில் ஏற்றும் தீபத்திற்கு பத்து காமாட்சியம்மன் விளக்கு ஏற்றுவதற்கு சமமாகும் அதே போல 100 குத்து விளக்குகளை ஏற்றுவதற்குச் சமமாகும் எனவே அகல் தீபம் ஏற்றுவது என்பது மிகவும் விசேஷமான பலன்களைக் கொடுக்கக் கூடியது நீங்கள் ஏற்றும் அகல் விளக்கில் ஒற்றைப்படை இரட்டைப்படை என்ற எண்ணிக்கை எதுவும் கிடையாது அகல் விளக்கிற்கு மட்டும் இதில் விதிவிலக்கு எத்தனை தீபங்கள் வேண்டுமானாலும் ஏற்றி வழிபடலாம் குறிப்பிட்ட பரிகாரங்களுக்கு மட்டுமே எண்ணிக்கை உண்டு ஒரே ஒரு அகல் விளக்கை மட்டும் தீபம் ஏற்றி மூன்று முறை மூலவருக்கு காண்பித்து விட்டு கோவிலில் வைக்கலாம்.

நாம் ஏற்றும் தீபம் திரி மற்றும் எண்ணெயை சார்ந்தது ஆகும் எனவே அதில் மண் அகல் பங்கு கொள்வதில்லை அகல் விளக்கு புதிதாக ஒவ்வொரு முறையும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை இந்த குழப்பம் பலருக்கும் இருக்கும் ஒவ்வொரு முறை கோவிலுக்கு செல்லும் பொழுதும் புது அகல் விளக்கு வாங்கி ஏற்ற வேண்டும் என்கிற அவசியம் எதுவும் இல்லை நீங்கள் ஏற்றிய பழைய விளக்குகளை கூட சுத்தம் செய்து விட்டு மீண்டும் தீபம் ஏற்றி வழிபடலாம்.

அகல் விளக்கு தீபம் ஏற்றும் பொழுது ஒவ்வொரு திரியைப் போட்டு ஏற்றக்கூடாது இரட்டைத் திரிகளை ஒன்றாக திரித்து அதில் தான் தீபம் ஏற்ற வேண்டும் அதே போல அடுத்தவர்கள் பயன்படுத்திய அகல் விளக்கை நாம் திரும்பவும் பயன்படுத்தலாமா ஆம் தாராளமாக மற்றவர்கள் பயன்படுத்திய அகல் விளக்கை நாம் பயன்படுத்தலாம் ஆனால் அதில் இருக்கும் எண்ணெயை ஒரு காகிதத்தால் துடைத்து விட்டு மீண்டும் புதிதாக எண்ணெய் ஊற்றி திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

நீங்கள் ஊற்றும் எண்ணெய் மற்றும் திரி மட்டுமே புதிதாக ஒவ்வொரு முறையும் இருக்க வேண்டும் விளக்கு ஏற்றிய எண்ணெய் மீண்டும் பயன்படுத்தக்கூடாதுஅதே போல எரிந்த திரியை மீண்டும் பயன்படுத்தக்கூடாதுஒவ்வொரு திரி போட்டு ஏற்றும் பொழுது ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டாகிறது கோவிலில் ஏற்றப்படும் அகல் விளக்கில் பஞ்சு திரி இட்டு ஏற்றினால் நீங்கள் வேண்டிய வேண்டுதல் உடனே பலிக்கும்.

வாழைத்தண்டு திரி தாமரைத் தண்டு திரி சிவப்பு திரி மஞ்சள் திரி பச்சை திரி கருப்பு திரி நீல திரி என்று விதவிதமான திரி வகைகள் விற்பனைக்கு உள்ளன இதில் சிகப்பு திரி போட்டு தீபம் ஏற்றினால் கடன் தொல்லை தீரும் என்பது ஐதீகம் அதுபோல நீல திரி போட்டுத் தீபம் ஏற்றினால் சனி தோஷங்கள் விலகும். கருப்பு நிற திரி போட்டுத் தீபம் ஏற்றினால் சகல தோஷங்களும் விலகுவதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. இது போல ஒவ்வொரு திரியும் வெவ்வேறு பலன்களை நமக்கு கொடுக்கும்.

வீட்டில் ஏற்றும் தீபங்களில் இருக்கும் திரிகளை ஒருபொழுதும் குப்பையில் எறியக்கூடாது அந்த திரிகளை ஒன்றாக சேர்த்து திருஷ்டி கழிக்க பயன்படுத்திக் கொள்ளலாம் நீங்கள் சாம்ராணி போட பயன்படுத்தும் தூபக்காலில் இந்த திரிகளைப் போட்டு கொட்டாங்குச்சி உடன் சேர்த்து எரித்து விட வேண்டும். இதனால் கெட்ட அதிர்வலைகள் திருஷ்டி தோஷங்களும் எளிதில் நீங்குவதாகவும் நம்பப்படுகிறது.

ஆன்மீக சிந்தனையாளர்,

-திருமதி சுகன்யா சுரேஷ்.

Comments