லஞ்சம்!! மாட்டிக்கொண்ட வணிகவரித் துறை அதிகாரி!!

    -MMH

கோவை ஆவாரம்பாளையம் தனியார் கம்பெனி உரிமையாளரிடம் ரூபாய் ஒரு லட்சம் வாங்கிய வணிக வரித்துறை அதிகாரி கைது. கோவை ஆவாரம் பாளையத்தில் தனியார் கம்பெனி உரிமையாளரிடம் கணக்கு ஆவணங்களில் உள்ள தவறை மறைப்பதற்காக ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு புகார் வந்ததன் பேரில் அவர்கள் வணிகவரி துறை அதிகாரியை கையும் களவுமாக கைது செய்தனர்.

கடந்த 2014- 2015ஆம் ஆண்டு சம்பந்தப்பட்ட கம்பெனியின் தணிக்கையாளர் செய்த பிழைனை சோதனையின்போது கண்டு பிடித்த வணிகவரித் துறை அதிகாரி, அந்த பிள்ளைக்கு அபராதமாக 10 லட்சம் வரை செலவாகும் என்றும் இதை மறைத்து கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு தனக்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் தர வேண்டுமென்று கம்பெனி உரிமையாளருடன் கேட்டுள்ளார். இதைப்பற்றி லஞ்ச ஒழிப்பு அதிகாரியிடம் புகார் அளித்தார் கம்பெனி உரிமையாளர். இதை விசாரித்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கம்பெனி உரிமையாளரிடம் ரசாயனம் தடவிய ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள நோட்டுக்களை கொடுத்து, அந்த நோட்டுகளை வணிக வரித்துறை அதிகாரி லஞ்சமாக பெற்ற போது கையும் களவுமாக அதிகாரிகள் அவரைப் பிடித்தனர் . மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-முகமது சாதிக் அலி.

Comments