உஷார்.. உஷார்..செத்தாலும் விடமாட்டாங்க! செத்தவனையும் விடமாட்டாங்க காசு தாங்க எல்லாம்!!

     -MMH

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அடுத்த ஒண்டிபுதூர் பகுதிகள் போலி ஆவணங்கள் தயாரித்து இறந்தவரின் சொத்தை அபகரித்த 6 பேர் மீது வழக்கு. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இந்து மதி (வயது 32). இவரது  தாத்தாவுக்கு சிங்காநல்லூர் அடுத்த ஒண்டிப்புதூரில் இடமொன்று இருந்துள்ளது. அதை அடமானம் வைத்து அன்பழகன் மற்றும் லக்ஷ்மன் இவர்களிடம் கடன் வாங்கியுள்ளார். இதற்காக அவர் பவர் பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார். இந்துமதி வாங்கிய கடனையும் அடைத்து விட்டதாக தெரிகிறது. இதையடுத்து கடந்த 2012 ஆம் ஆண்டு இந்துமதியின் தாத்தா இறந்து விட்டார். 

ஆனால் இதனை மறைத்து அவர் உயிருடன் இருப்பதாக கூறி போலி ஆவணங்கள் தயாரித்து சிங்காநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் வேறு நபர்கள் மீது சொத்தை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதையறிந்து அதிர்ச்சி அடைந்த இந்துமதி இதைப்பற்றி சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் அன்பழகன் மலர்கொடி லட்சுமணன், உதயகுமார் பிரபாகரன் மற்றும் மருத்துவர் விஜயகுமார் ஆகியோர் மீது புகார் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். "செத்தாலும் விடமாட்டாங்க, செத்தவனையும் விடமாட்டாங்க, காசு படுத்தும் பாடு மனிதனை மதி இழக்கச் செய்து சுழட்டி சுழட்டி அடிக்கிறது. தேவைக்குப் பணம் என்பது பொய் பணமே, தேவை என்ற சூழல் ஆகிவிட்ட நிலையில்  மனிதா விழித்துக்கொள் இல்லையேல் பணம் உன்னை விழுங்கிவிடும்" என்ற சமூக சிந்தனையுடன்,

நாளைய வரலாறு செய்திக்காக,

-முகம்மது சாதிக் அலி.

Comments