முஸ்லீம் பெண்களின் மேன்பாட்டிற்கு ஓசையின்றி இரு பெண்களாற்றும் சேவை!!

  -MMH

   தூத்துக்குடி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்தின் கௌரவ செயலாளர் வஹீதா,  இணை செயலாளர் சித்தி ரம்ஜான் முன்னிலையில் அரசு அதிகாரிகள் பங்கு கொண்டு முஸ்லிம் பெண்களுக்கு உதவி தொகை வழங்கிய விழா நடைபெற்றது 

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், தூத்துக்குடி நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சசர் கீதா ஜீவன், மீன் வளத்துறை, மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் ஆகியோர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

அதில் ஒரு பகுதியாக மாவட்ட முஸ்லீம் பெண்கள் உதவும் சங்கத்தின் மூலம் 60 பேர்களுக்கு தலா ரூபாய். 10,000/- காசோலை வழங்கும் திட்டத்தை 10 பயனாளிகளுக்கு இவ்விழாவில் காசோலைகளை வழங்கி துவக்கி வைத்தனர்.

அதன் தொடர்ச்சியாக அன்றைய தினத்தில் மாலை 3.30 மணியளவில் காயல்பட்டினம் துளிர் கேளரங்கத்தில் தூத்துக்குடி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்தின் சார்பில் மீதமுள்ள  50 முஸ்லிம் பெண்களுக்கு ரூபாய் 10,000 /- வீதம் உதவித்தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது. 60 பயனாளிகளுக்கான இந்த உதவி தொகையின் மொத்த மதிப்பு ருபாய் 6,00,000 /- (ஆறு லட்சம்) ஆகும்.

இந்த உதவி திட்டத்தின் மூலம் சிறுபான்மை சமூகத்தை சார்ந்த முஸ்லிம் விதவை பெண்கள், ஆதரவற்றோர், ஏழை பெண்கள் ஆகியோருக்கு சிறு தொழில், சிறுவியாபாரத்தில் ஈடுபட்டு வாழ்வாதாரதிற்கு வருமானம் ஈட்டிட  இந்த உதவி தொகை வழங்கப்பட்டது.

இந்த தொகை முஸ்லிம் சமூக புரவலர்கள் தந்த நன்கொடைகளுடன் இணைந்து தமிழக அரசும் சேர்த்து இருமடங்கு இணையாக வழங்கிய உதவி தொகையாகும்*

இந்த உதவி தொகை வழங்கும் முகாமில் முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்தின் இணை செயலாளர் சித்தி ரம்ஜான், இந்த திட்டத்தின் பயன்களை விளக்கி கூறியதுடன், உதவி வழங்கப்பட்ட நோக்கத்திற்காக இத்தொகை பயன்படுத்த வேண்டும் என்பதையும் பயனாளிகளிடம் வலியுறுத்தினார். நன்கொடை வழங்கிய முஸ்லீம் புரவலர்கள், 2 மடங்கு இணை தொகை வழங்கிய தமிழக முதல் அமைச்சர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் சமூக புரவலர் அப்துல் காதர் (எ) சின்ன தம்பி , துளிர் நிறுவனர் வக்கீல் அஹமது, சகோதரி ஹலி லாத்த , தூத்துக்குடி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் நல்ல பெருமாள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு ஊர்களின் முஸ்லிம் ஜமாத்துகளை சேர்ந்த ஏழை முஸ்லிம் பெண்கள், இச்சங்கத்தின் செயலாளர் வஹீதா, இணை செயலாளர் சித்தி ரம்ஜான் ஆகியோரின் வழிகாட்டுதலின் மூலம் இத்திட்டத்தில் உதவி தொகை பெற்று பயனடைந்தனர்.

நாளைய வரலாறு செய்தியாளர்,

-அன்சாரி,நெல்லை.

 

Comments