ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதம் ரத்த வாந்தி எடுத்து மயங்கி சிறுவன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு

   -MMH

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சான்றோர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி இவரது மூத்த மகன் அசோக் வயது 17 மற்றும் இளைய மகன் ஹரிசாந்த் வயது 14 ஆகியோர் பள்ளி விடுமுறை காரணமாக ஆம்பூர் அடுத்த வடசேரி கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி இருந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரு சக்கர வாகனத்தில் வடசேரியில் இருந்து சான்றோர் குப்பம் பகுதிக்கு வந்து கொண்டிருந்தபோது மேல்சானாங்குப்பம் பகுதியில் சாலையின் குறுக்கே நாய் வந்ததால் இருசக்கர வாகனத்தில் வந்த அசோக் மற்றும், ஹரிசாந்த் ஆகியோர் வந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில் விபத்து ஏற்பட்டு இருவரும் படுகாயமடைந்துள்ளனர். 

உடனடியாக அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் விபத்தில் சிக்கிய 2 சிறுவர்களையும் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து இருந்த நிலையில் கை மற்றும் கழுத்து பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டதால் இருவரையும் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்துள்ளனர் இந்த நிலையில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆம்புலன்ஸுக்கு பலமுறை தகவல் சொல்லியும் அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் வாகனம் வராததால் ஆத்திரமடைந்த சிறுவர்களின் உறவினர்கள் தனியார் ஆம்புலன்ஸ் வரவழைத்து வேலூருக்கு அழைத்துச் செல்வதாக கூறி யுள்ளனர் இதற்கு மறுப்பு தெரிவித்த மருத்துவமனை ஊழியர்கள் அரசு ஆம்புலன்சில் மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும் எனக் கூறி சுமார் 3 மணி நேரம் சிகிச்சையை தாமதப்படுத்தி உள்ளனர். இதனால் விபத்தில் சிக்கிய சிறுவன் ஹரிசாந்த் ரத்த வாந்தி எடுத்து மயக்கமடைந்து உள்ளார். 

இதனால் மேலும் பதற்றமடைந்த சிறுவர்களின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் சுமார் 2 மணி அளவில் ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டு இருவரும் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் இதனால் ஆம்பூர் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

-P.ரமேஷ், வேலூர்.

Comments