நிஜ ஹீரோ யாஹியா!! ஓட்டுனரின் உயிரைக் காத்த உதவி ஆய்வாளர் குவியும் பாராட்டு..!!

 -MMH

சென்னை பூந்தமல்லி-திருவொற்றியூர்  மாநகரப் பேருந்தை (தடம் எண் -101), ஏழுமலை என்ற ஓட்டுநர், ஓட்டிச் சென்றுள்ளார். பேருந்து, நியூ ஆவடி சாலை சந்திப்பை தொட்டபோது, எதிர்பாரா விதமாக, ஏழுமலை மயக்க நிலைக்குப் போனார். 

அந்த நிலையிலும் விபத்து நிகழ்ந்து விடாமல், பேருந்தை  பாதுகாப்பாக ஓரம் கட்டி நிறுத்தியுள்ளார் ஏழுமலை. அதேநேரத்தில், அந்தப் பகுதி ரோந்துக் காவலில் இருந்த போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் யாஹியா,  நிஜ நாயகனாக களத்தில் இறங்கியுள்ளார்.

போலீஸ் பேட்ரால் ஜீப்பில், ஓட்டுநர் ஏழுமலையை  ஏற்றிக் கொண்டு; சைரனை ஒலிக்க விட்டு, அரசு கே.எம்.சி., மருத்துவமனைக்கு நிமிடத்தில் விரைந்துள்ளார் இந்த உதவி ஆய்வாளர். 

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதால் இனி ஆபத்து ஏதும் இல்லை,  குறித்த நேரத்தில் கொண்டுவந்து சேர்த்து விட்டீர்கள், மருத்துவர்கள் கூறிய உடன்  பெருமூச்சு விட்டிருக்கிறார் யாஹியா.

கோல்டன் ஹவர்ஸ் என்கிற உயிர்காக்கும் நேரத்தை, உதவி ஆய்வாளர்- யாஹியா சரியாய்ப் பயன்படுத்தியதால்  அரசு பேருந்து ஓட்டுனர் ஏழுமலை, உயிரை. காத்து மறுவாழ்வு வழங்கியிருக்கிறார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கடமை தவறாத இந்த காவல் ஆய்வாளர் செய்த இந்த முயற்சிக்கு அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

நாளை வரலாறு செய்திக்காக,

-அப்துல் ரஹீம், திருவல்லிக்கேணி.

Comments