திருப்பத்தூரில் டீக்கடைக்குள் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு !!

 

-MMH

      சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சிவகங்கை சாலையில், அரசு மருத்துவமனை பின்புறத்தில் சுப்பையா என்பவர் டீக்கடை நடத்திவருகிறார். இன்று அவரது கடைக்குள் கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று புகுந்தது.

அதைக்கண்டு அச்சமடைந்த சுப்பையா, உடனடியாக திருப்புத்தூர் தீயணைப்புத் துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சடையாண்டி தலைமையிலான குழுவினர் சுப்பையாவின் டீக்கடைக்கு பாம்பு பிடிக்கும் உபகரணங்களுடன்

விரைந்து வந்து, 6 அடி நீளமிருந்த கண்ணாடி விரியன் பாம்பை பத்திரமாக மீட்டு, திருப்பத்தூர் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

-அப்துல்சலாம், திருப்பத்துர்.

Comments