சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கட்டிட மேஸ்திரி போக்சோ சட்டத்தில் கைது!!

     -MMH

வேலூர் காட்பாடி அடுத்த விருதம்பட்டு பகுதியை சேர்ந்த 5-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு வீட்டில் யாரும் இல்லாத போது அதே பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி பாலாஜி (30) என்பவன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இந்நிலையில்  சிறுமிக்கு திடீர் காய்ச்சல் அடிப்பதை உணர்ந்த தாய் சிறுமியிடம் விசாரிக்கும் போது சிறுமி நடந்ததை எடுத்து கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் தாயார் விருதம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் கட்டிட மேஸ்திரி பாலாஜியை கைது செய்த காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

-P.ரமேஷ், வேலூர்.

Comments