விபத்து ஏற்பட காரணமாக இருக்கும் போக்குவரத்து விதிமீறல்கள்!!

  -MMH

    கோவை மாவட்டம் போத்தனூர் ரயில் கல்யாண மண்டபம் அருகே செட்டிபாளையம் வெள்ளலூர் செல்லும் சாலையில் மேம்பாலம் தொடங்குகிறது. இந்த இடத்தில் போத்தனூரில் இருந்து சுந்தராபுரம் சாரதாமில்  சாலைக்கு  செல்லும் வாகன ஓட்டிகள் மேம்பாலத்திற்கு பக்கத்தில் உள்ள சர்வீஸ் சாலையை பயன்படுத்தாமல் மேம்பாலம் தொடங்கும் இடத்தில் இருந்து திரும்பி சுந்தராபுரம் செல்லும் சாரதா மில் சாலைக்கு செல்கிறார்கள்.

அப்போது போத்தனூரில் இருந்து வரும் கனரக வாகனங்களாளும் சுந்தரா புரத்தில் இருந்து சாரதா மில் சாலை வழியாக வந்து செட்டிபாளையம் சாலைக்கு திரும்பும் வாகனங்களாளும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே விபத்து ஏற்படுவதற்கு முன்பாக  இதற்கு ஒரு நிரந்தர தீர்வு வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments