சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது !!

 

-MMH

           கோவை  காரமடையை சேர்ந்தவர் சிவசக்தி (வயது 18). இவர் பச்சை குத்தும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.அதன்படி இருவரும் பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஒரு கோவில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்து அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி சிவசக்தி திருமணம் செய்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். 

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments