குழந்தைகளுக்கான ஜெட் வேகத்தில் தயாராகும் இந்தியா-கோவிட் சுரக்சா திட்டம் வெற்றிப் படி!!!

  -MMH

   ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான 'CORBEVAX' என்ற கொரோனா தடுப்பூசியின், 2 மருத்துவ பரிசோதனைகளுக்கு Drugs Controller General of India (DCGI)எனப்படும் இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனா தடுப்பூசிகளின் ஆராய்ச்சி, மற்றும் மேம்பாடு, உற்பத்தி ஆகியவற்றில் முதலீடுகளை அதிகரிக்க மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின், உயிரி தொழில்நுட்பத்துறை, எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதில் கொவிட் சுரக்‌ஷா திட்டமும் ஒன்று. இது பாதுகாப்பான, திறனுள்ள தடுப்பூசி உருவாக்கத்தை துரிதப்படுத்துகிறது.

'Biological E' என்ற நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியின் பல கட்ட பரிசோதனைகளுக்கு உயிரி தொழில்நுட்பத்துறை மற்றும் அதன் பொதுத்துறை நிறுவனமான உயிரி தொழில்நுட்ப தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சில் (BIRAC) ஆகியவை ஆதரவு அளித்து வருகிறது. கொவிட் சுரக்‌ஷா திட்டத்தின் கீழ் இதற்கு நிதியுதவியும் அளிக்கப்படுகிறது.

தற்போது, Biological E நிறுவனம், வயது வந்தோருக்கு தயாரித்த கொரோனா தடுப்பூசியின் 3ம் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் பெற்றுள்ளது.

மேலும், இந்நிறுவனம், 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பதினெட்டு வயதிற்கு உள்ளிட்டோருக்கு தயாரித்த 'CORBEVAX' என்ற தடுப்பூசியின் இரண்டாவது மற்றும் 3ம் கட்ட மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ள இந்த நிறுவனம், இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதலை கடந்த 1ம் தேதி பெற்றது. இந்த தடுப்பூசி ஆர்பிடி புரத வகையைச் சேர்ந்தது.

இது குறித்து உயிரி தொழில்நுட்ப துறை செயலாளரும், பிராக் அமைப்பின் தலைவருமான டாக்டர் ரேணு ஸ்வரூப் கூறுகையில், '' குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கான 'CORBEVAX' தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையின் முடிவுகளை நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம். இதற்கு இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதல் கிடைத்துள்ளது மகிழ்சியளிக்கிறது'' என்றார்.

Biological ஏ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திருமிகு மஹிமா டட்லா கூறுகையில், '' இந்த ஒப்புதல் எங்கள் அமைப்பை முன்னேறிச் செல்லவும், எங்கள் கொரோனா தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கவும் ஊக்குவிக்கிறது'' என்றார்.

-N.V.கண்ணபிரான்.

Comments