கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள்! கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் அதிரடி! !

  -MMH

   கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று மற்ற மாவட்டங்களை விட சற்று அதிகமாக உள்ளது. மேலும் கோவை மாவட்டத்திற்கு பக்கத்தில் உள்ள கேரளாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அங்கிருந்து பலர் கோவை வந்து செல்வதால் கோவை மாவட்டத்திலும் தொற்று அதிகரிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே நோய் தொற்று பரவலை தடுக்க கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.அதன்படி விடுமுறை நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையிலும் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாகவும் , மளிகை, காய்கறி, பால், மருந்தகம், ஆகிய கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது .

அதன்படி நேற்று கோவை மாநகரில் உள்ள ஒப்பணக்கார வீதி, பெரிய கடை வீதி,இராஜ வீதி, டவுன் ஹால் ,கிராஸ்கட் ரோடு, 100 அடி சாலை, மற்றும் மக்கள் கூட்டம் அதிக அளவு கூடும் இடங்களில் உள்ள ஜவுளி கடைகள், நகை கடைகள், செல்போன் கடைகள் ,புத்தகக் கடைகள், மற்றும் வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன இதன் காரணமாக அப்பகுதி ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது

மளிகை, காய்கறி, பாலகம், மருந்தகம் , ஆகிய கடைகள் மட்டும் திறந்து வைக்கப்பட்டு இருந்தன. இதுதவிர மாவட்டத்தில் உள்ள தியேட்டர்கள் டாஸ்மாக் கடைகள் மற்றும் பூங்காக்கள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தன. உலவர் சந்தை 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட்டது. பெரும்பாலான இறைச்சிக் கடைகளும் உக்கடம் மீன் மார்க்கெட் போன்றவைகளும் மூடப்பட்டிருந்தன.

பொதுப் போக்குவரத்து ஆனா அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கின அதில் குறைந்த அளவு பொதுமக்களே பயணம் செய்தனர். பெரும்பாலான பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை இதன் காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோவையின் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments