கோவையில் "ஒய்ஸ் மென்" கிளப் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது!!

  -MMH

   கோவையில் ஒய்ஸ் மென்" கிளப் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள், சக்கர நாற்காலி  உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 

ஒய்ஸ் மென்" கிளப் சார்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. கொரானா காலகட்டத்திலும் இந்த அமைப்பு தொடர்ந்து சமூக பணிகளை மேற்கொண்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக

கோவை  ஏ.டி.டி.காலனியில் உள்ள "கேரளா கிளப்"பில்   மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள், சக்கர நாற்காலி உள்ளிட்டவைகளை வழங்கினார். ஓய்வுபெற்ற ஆசிரியை கே.வி சரஸ்வதியின் வாயிலாக இத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் நிறைவேற்றப்பட்டன. நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஒய்ஸ் மென்" கிளப் நிர்வாகிகளான எஸ் எம் சரவணன், விஜயராணி,செல்வகுமார் சதீஷ்குமார் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-சுரேந்தர்.

Comments