சோதனைச் சாவடிகளில் தீவிர பரிசோதனை: மாவட்ட ஆட்சியர் அதிரடி!

  -MMH

  தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு இருப்பதால் கோவை மாவட்டத்திலுள்ள கேரள மாநில எல்லையையொட்டி உள்ள சோதனைச் சாவடிகளில் தீவிர தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கேரள எல்லையான வாளையாறு பகுதியில்  கோவை  மாவட்ட ஆட்சியர் சமீரன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். பின் அவர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் 12 வயது சிறுவன் நிபா வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளார் .இதன் காரணமாக கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்திற்கு வரும் 13 சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது இந்த கண்காணிப்பு மற்றும் ஆய்வின் போது கேரளாவில் இருந்து வருபவர்கள் 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட ஆர். டி .பி. சி. ஆர் சான்றிதழ் மற்றும் இரண்டு தவணை தடுப்பூசி போட்ட சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்,என்றும்  மேலும் உடல் வெப்பநிலை சோதனை நடத்தப்படுகிறது என்றும், 

கொசுக்கள் மூலம் பரவும் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கோவை மாவட்டத்தை பொருத்தவரை தற்போது நிபா வைரஸ் பாதிப்பு ஏதுமில்லை என்றும் இருப்பினும் அரசு மருத்துவமனைகளில் அனைத்து வகை காய்ச்சலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் நீலகிரி மாவட்டத்தில் மதுபான கடைகளில் மது வாங்கவும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கவும் சம்பந்தப்பட்ட நபர் கொரனோ தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்கிற உத்தரவு உள்ளது .அதுபோல கோவை மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்த கொரனோ நோய்தொற்று  பரவலை பொறுத்து முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments