கிராவல் மண் கடத்தல்..! மாட்டிக்கொண்ட ஆசாமிகள்.. லாரிகள் பறிமுதல்,போலீசார் விசாரணை..!!!

  -MMH

   அன்னூர்: கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒட்டர் பாளையத்தில் லாரிகளின் மூலம் கிராவல் மண் கடத்தப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில், 4 லாரிகளை பறிமுதல் செய்ததோடு லாரிகளின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ஒட்டர் பாளையத்தில் லாரிகள் மூலம் கிராவல் மண் கடத்தப்படுவதாக கிராம நிர்வாக அதிகாரி (பொறுப்பு ) திரு வெங்கடாச்சலம்  அவர்களுக்கு ரகசியத் தகவல்  கிடைத்தது. ரகசிய தகவலின் அடிப்படையில் கிராம நிர்வாக அதிகாரி வெங்கடாச்சலம்  போலீசாருடன் இணைந்து இன்று அதிகாலை கண்காணிப்பில் ஈடுபட்டார்  அப்போது புளுவா பாளையத்திலிருந்து  இருந்து ஸ்ரீநகருக்கு  சென்று கொண்டிருந்த 4 லாரிகளில் சோதனை செய்தபோது கிராவல் மண் கடத்தப்பட்டது  ஊர்ஜிதம் ஆகியது.

உடனே இதைப்பற்றி கிராம நிர்வாக அதிகாரி வெங்கடாச்சலம்  போலீசில் புகார் அளித்ததன் பேரில்  போலீசார் 4 லாரிகளையும்  பறிமுதல் செய்து, லாரி உரிமையாளர்கள் கலைச்செல்வன், கோபாலசாமி, பிரகாஷ் ஓட்டுனர்கள் தீனதயாளன், பிரதீப் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிராம நிர்வாக அதிகாரி வெங்கடாசலத்தின் இந்த அதிரடி  நடவடிக்கையும் அவருடைய துணிச்சலையும் அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-முஹம்மது சாதிக் அலி, அன்னூர் பகுதி.

Comments