உயிர் போனா திரும்பாது! கண்டுகொள்ளுமா நெடுஞ்சாலைத்துறை?

   -MMH

கோவை மாவட்டம் மதுக்கரை வாளையார் பகுதியில் அமைந்துள்ள தமிழக கேரளா எல்லையான இந்த இடத்தில் அதிகப்படியான விபத்துகள் நடைபெறுவதாக தெரிகிறது. நேற்றைய தினம் லாரி ஒன்று விபத்துக்குள்ளானது. விபத்து எப்படி உண்டாகிறது என்பதை பார்த்தால் நெஞ்சம் பதறுகிறது.

தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனமாக இருந்தாலும் கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரக்கூடிய நான்கு சக்கர வாகனங்கள் ஆக இருந்தாலும் இருள் சூழ்ந்த பகுதியான அந்த பகுதியை கடக்கும் பொழுது விபத்து நடைபெறுகிறது.

இது ஒருபுறமிருக்க சாலையில் இருக்கும் குழிகளை சரி செய்வதாக நெடுஞ்சாலைத்துறையில் வைக்கப்படும் தடுப்பு பலகை முக்கிய காரணம் வகிக்கிறது. இந்த தடுப்பின் மூலமாக ஏற்படும் விபத்து அதிகம், என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். மனிதன் வாழ உயிர் மிக முக்கியமானது. இதனை கவனத்தில் கொண்டு நெடுஞ்சாலைத்துறை விபத்து நேரிடாமல் அந்த தடுப்பில் முன்னெச்சரிக்கை ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும் என்றும் ஒலிகளை எழுப்பி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் விபத்தை தடுக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

தலைமை நிருபர்,

-ஈசா.

Comments