குடும்பத்தில் ஒற்றுமை நிலைத்திட குடும்பத்தோடு தரிசிக்க வேண்டிய தெய்வமும் நாளும்!!

  -MMH

   மாதம் ஒருமுறை வரும் அமாவாசை நாளிலிருந்து மூன்றாவது திதி தினத்தில் வரும் மூன்றாம் பிறையை குடும்பத்தோடு தொடர்ந்து மாதம் தோறும் இடைவிடாது தரிசித்து வந்தால் இதுவும் மகத்தான சந்திரமூர்த்தி காண பூஜை என்பதால் வியக்கத்தக்க முறையில் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

ஸ்ரீ சந்திரசேகரர் திருவக்கரை, ஸ்ரீ சந்திர மௌலீஸ்வரர் முசிறி, தஞ்சாவூர் அருகே மஹிமாலை, பழையாறை ஸ்ரீ சோமநாதர், பெருமகளூர் ஸ்ரீ சோமநாதேஸ்வரர், தக்கோலம் ஸ்ரீ சோமநாதேஸ்வரர், போன்ற சந்திர சக்தி தலங்களில் தம்பதி சகிதம் மூன்றாம் பிறைச் சந்திர தரிசனம் பெற்று சந்திரமூர்த்தி காண வழிபாடுகளை ஏழைகளுக்கான தக்க தான தர்மங்கள் உடன் நிகழ்த்தி வந்திடில் தம்பதியரிடையே அற்புதமான முறையில் மன ஒற்றுமை வளர்ந்து குடும்பத்தில் சாந்தம் ஏற்படும் என்பது நிதர்சனம்.

ஆன்மீக சிந்தனையாளர்,

-திருமதி. சுகன்யா சுரேஷ், பொள்ளாச்சி.

Comments