நெல்லையில் ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்!!

  -MMH

ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தென் மண்டல செயலாளர் சுகுமாறன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் காசி விஸ்வநாதன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

பீமா கோரேகான் சதி வழக்கில் சிறைப்படுத்தப்பட்டுள்ள 15 பேரையும் விடுதலை செய்ய வேண்டும். கருத்துரிமைக்கு எதிரான உபா சட்டத்தை உடனே திரும்ப பெற வேண்டும். தேசிய புலனாய்வு முகமைக்கு அளிக்கப்பட்டுள்ள வரம்பற்ற அதிகாரத்தை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாநில செயலாளர் தினிஷ், மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், செயலாளர் சுரேஷ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாலன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநகர செயலாளர் நல்லதம்பி, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் துர்க்கைமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்தியாளர்,

-அன்சாரி, நெல்லை. 

Comments