மின் ஆக்கி இருந்தும் பயனில்லை!! - வால்பாறை அரசு மருத்துவமனையின் அவல நிலை!!

  -MMH

  கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையின் அவல நிலை. இரவு நேரங்களிலும் மழைக்காலங்களிலும் மின்சாரம் பிரசவ வார்டு மற்றும் ஆபரேஷன் தியேட்டர்களிலும்  அதிக அளவு இருப்பதில்லை. இரவு முழுதும் மழை அதிகமாக வரும் பொழுதும் இடி, மின்னல் கூடிய மழையின் காரணங்களால்  தினசரி அதிக அளவு மின்சாரம் தடைபட்டு கொண்டிருக்கிறது. அரசு மருத்துவமனை அமைப்பு தனி பட்ஜெட் ஒதுக்கியும் ஸ்கேன், எக்ஸ்ரே மற்றும்  அவசர உதவிகளுக்கும் மின்சாரம் தடைபட்டு கொண்டு இருக்கிறது.

மின்சாரத் தட்டுப்பாட்டினால் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். தட்டுப்பாடில்லாத மின்சாரம் மருத்துவ மனையில் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுதுள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-திவ்யா குமார், செந்தில் முருகன், வால்பாறை.

Comments