எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கொரோனா, டெங்கு, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி!

 

-MMH

     சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், கரிசல்பட்டி மற்றும் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிப் பகுதிகளில்  கொரோனா நோய்த்தொற்று, டெங்கு மற்றும் பிளாட்ஸ்டிக் ஒழிப்பு பற்றி கிராமப்புற பொதுமக்களுக்கு கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திட முருகன் கலைக்குழு சார்பில் கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று கரிசல்பட்டி, வலசைப்பட்டி மற்றும் முசுண்டப்பட்டி ஆகிய கிராமங்களிலும், நாளை புழுதிபட்டி, எஸ்.புதூர் மற்றும் உலகம்பட்டியிலும் நடைபெறுகிறது. அதன் ஒருபகுதியாக இன்று கரிசல்பட்டி பள்ளிவாசல் அருகே முருகன் கலைக்குழு சார்பில் கொரோனா நோய்தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள முககவசம் அணிவது, கைகளை சுத்தமாக வைத்திருத்தல், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும் எனவும் டெங்கு பரவாமல் தடுக்க வீடுகளையும், வீடுகளைச் சுற்றியும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும், டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழிக்கவேண்டும்,

தண்ணீரை காய்ச்சி வடிகட்டி குடிக்கவேண்டும் எனவும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் பற்றியும் கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

-அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments