புது காரு புது வீடு!! ஆட்டையைப் போட்டு ஆடம்பரமான அம்மணி!!

     -MMH

அன்னூர் : 

சரவணம்பட்டி அருகே தனியார் பைனான்ஸ் கம்பெனியில் பணமோசடி செய்த பெண் தலைமறைவு. போலீசார் தேடி வருகின்றனர். கோவை சக்தி சாலை சரவணம்பட்டியில் கமலம் ஆட்டோ பைனான்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் சரவண செல்வன் (வயது 39). இவர் பழைய இருசக்கர வாகனங்களுக்கு பைனான்ஸ் செய்து வருகிறார். இவரது நிறுவனத்தில் கவுண்டம்பாளையம் அருகே ஆரூர் செட்டி புதூரை சேர்ந்த செந்தில் குமாரின் மனைவி கவிதா. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த பைனான்ஸ் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். 

இவர் பண மோசடி செய்து தலைமறைவானார். இதையடுத்து சரவண செல்வன் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கவிதா பல லட்சம் ரூபாய் மோசடி செய்து தன் கணவருக்கு இனோவா கார் வாங்கி கொடுத்துள்ளார். மேலும் புதிய வீடு வாங்குவதற்கு அட்வான்ஸ் கொடுத்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கவிதா தொடர்ந்து தலைமறைவாக இருப்பதனால் போலீசார் தேடி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-முஹம்மது சாதிக் அலி.

Comments