முஸ்லிம் கைதிகளை விடுவிக்கக்கோரி சிறை முற்றுகை போராட்டம்!!

   -MMH

  பாளையங்கோட்டையில் முஸ்லிம் கைதிகளை விடுவிக்கக்கோரி சிறை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் வருகிற 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளையொட்டி தமிழக சிறைகளில் 14 ஆண்டுகளுக்கு மேல் வாடும் முஸ்லிம் கைதிகள் மற்றும் 7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி நேற்று சிறை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. 

மாநில தலைவர் தடா ரஹீம் தலைமையில் பாளையங்கோட்டை மத்திய சிறை அருகில் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் சிறைகளில் வாடும் முஸ்லிம் கைதிகள் மற்றும் 7 தமிழர்களை விடுதலை செய்ய மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ராஜா உசேன், பொருளாளர் முள்ளான் செய்யது அலி, நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் காதர் பாஷா, செயலாளர் ஷேக் ஹயாத் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-அன்சாரி,நெல்லை.


Comments