ஆனைமலை காவல் நிலையத்தின் சார்பாக தடுப்பூசி முகாம்!!

  -MMH

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை காவல் நிலையத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசி முகாம் இன்று ஆனைமலை குறத்திகள் பால்வாடி பள்ளிக்கூடத்தில் நடைபெற்றது.

இம்முகாமை ஆனைமலை உதவி ஆய்வாளர் துவக்கி வைத்தபின்பு முகாமில் காவலர்களின் குடும்பத்தினரும் மற்றும் பொதுமக்களும் ஏராளமானோர் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மேலும் ஆனைமலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு சின்னக்காமனன் அவர்கள் தலைமையில் முகாம் சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

-M.சுரேஷ்குமார், தமிழகத் துணை தலைமை நிருபர்.

Comments