சிங்கம்புணரி அருகே உலகம்பட்டியில் கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டி! உயிருடன் மீட்ட தீயணைப்புதுறை!

 

-MMH

      சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், உலகம்பட்டியில்  அழகு என்பவர் அங்குள்ள வயல்வெளியில் இன்று தனது பசுமாடு மற்றும் அதன் கன்றுக்குட்டியை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்று வயல் பகுதியில் கட்டி வைத்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். மாலையில் பால் கறப்பதற்காக திரும்பி வந்து பார்த்த போது மாடு மட்டும் மேய்ந்து கொண்டிருந்த நிலையில் அங்கிருந்த கன்றுகுட்டியைக் காணவில்லை.

சுற்றித்தேடிப் பார்க்கையில் அருகிலிருந்த கிணற்றில் கன்று விழுந்து கிடந்தது. இதனை அடுத்து அருகில் உள்ள பொன்னமராவதி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த பொன்னமராவதி தீயணைப்புத்துறை வீரர்கள் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் போராடி, இன்று மாலை 5 மணியளவில் கன்றுக்குட்டியை உயிருடன் மீட்டனர்.

கன்று குட்டியை மீட்ட பொன்னமராவதி தீயணைப்புத் துறை வீரர்களுக்கு மாட்டின் உரிமையாளர் அழகும், உள்ளூர் பொதுமக்களும் மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்தனர்.

-அப்துல்சலாம்.

Comments