ஆஷா பணியாளர்கள்... பணி நிரந்தர உரிமைப் போராட்டம்..! கண்டுகொள்ளுமா அரசு..!!

-MMH


கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் பணி நிரந்தரம் கோரிக்கையை வலியுறுத்தி ஆஷா பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.பணியாளர்கள் கடந்த 4 ஆண்டுகாலமாக ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருகின்றார்கள், கடுமையான குளிர், பனிப்பொழிவு, கொரோன காலங்களிலும் தொய்வின்றி பணியாற்றி வந்ததாக,

மேலும் கொரோனா  காலங்களில் ஆஷா பணியாளர்கள் இருவர் இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கின்றன. ஆகவே அரசு தங்களை கவனத்தில் எடுத்துக்கொண்டு தங்களுக்கு உதவ வேண்டுமென்றும், நிரந்தர பணி ஆணை வழங்கிட வேண்டுமென்று போராட்டம் நடத்தினர்.

நாளைய வரலாறு செய்திக்காக

-திவ்ய குமார், வால்பாறை.

Comments