தமிழகத்தில் கோவை மாவட்டம் முதலிடம்!! மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் புகழாரம்!!

 -MMH 

கோவை மாவட்டத்திற்கு மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தல் மற்றும் பல்வேறு நலத்திட்ட  நிகழ்ச்சிகளை துவக்கி வைப்பதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம்  வருகை தந்தார்.

இந்நிலையில் இன்று காலை பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் பிராண வாய்வு உற்பத்தி இயந்திரத்தை துவக்கி வைத்த பிறகு தமிழக கேரள எல்லைப் பகுதியான மீனாட்சிபுரம் ரயில்வே கேட் ஆனைமலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட காவல் நிலைய சோதனைச் சாவடியை பார்வையிட்டார். அப்பொழுது கேரளாவில் இருந்து தமிழகம் வந்த வாகனங்களை நேரடியாக அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். பின்பு அப்பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார்.

மேலும் இப்பகுதியில் காவல்துறையின் செயல்பாடு சிறப்பாக உள்ளது என பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று காலை முதல் மாலை 7 மணி வரை மெகா கொரோனா தடுப்பூசி முகாம் 20 ஆயிரம் இடங்களில்  நடைபெறுகிறது. இந்த முகாமில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலக்கை அடைவோம்:

நம்பிக்கைக்கு காரணம் கடந்த வாரம் 12ம் தேதி தமிழக முதல்வர் ஆணைப்படி 40 ஆயிரம் மையங்களில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில்  28 லட்சத்து 91 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர் என்பதை சுட்டிக்காட்டினார். 


மேலும் கோவை மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் % அடிப்படையில்  கோவை முதலிடம் வைப்பதாக தெரிவித்தார்.

29 லட்சத்தி  27 ஆயிரத்தி 149 பேருக்கு 18 வயதை கடந்தவர்கள்  தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்களில்   முதல் தவணையாக 75% பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர் அந்த வகையிலும் கோவை முதலிடம் வகிக்கிறது என்று குறிப்பிட்டார். 

தமிழக துணை தலைமை நிருபர், 

M.சுரேஷ்குமார்.

Comments