உடுமலையில் தந்தை பெரியார் பிறந்த நாளில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுகவினர்!!

    -MMH

 உடுமலையில் தந்தை பெரியார் பிறந்த நாளில் அவரது சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா மாவட்ட கழக பொறுப்பாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் தலைமையில் திமுகவினர் கொழுமம், பாலப்பம்பட்டி, குடிமங்கலம் பகுதிகளில் உள்ள சமத்துவபுரத்தில் அமைக்கபட்டுள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

தொடர்ந்து அனைத்து கிராமங்களிலும் பெரியார் படம் வைக்க பட்டு மரியாதை செய்தனர். இந்நிகழ்ச்சியில் உடுமலை நகர செயலாளர் மத்தீன் ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் சாகுல்அமீது, ஈஸ்வரசாமி, ராமசாமி, செல்வராஜ், முருகேசன், கிரி, சியாம் மற்றும் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் முபாரக் அலி செல்லப்பன் தங்கராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

-துல்கர்னி உடுமலை.

Comments