திருப்பூர் மாவட்ட ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் நடைபெற்றது !!

-MMH 

     மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி - திருப்பூர் மாவட்ட ஊராட்சி வார்டு 16-க்கு உட்பட்ட 2020 - 2021 ஆண்டுக்கான 15 -வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி 22,50,000காண பணிகளை திமுக திருப்பூர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன் Ex MLA  தலைமையில்  அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் உடுமலை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் புவியரசு மாவட்ட கவுன்சிலர் மலர்விழி பாபு  ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமி முருகன்  துணை தலைவர் சண்முகவடிவேல்  ஊராட்சி மன்ற தலைவர்கள் செழியன், தெய்வானை, கிருஷ்ணவேணி, பாலதுரை, ராதிகா, ஒன்றிய குழு உறுப்பினர்கள்  கவிதா மணி, திலகவதி  மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மணிகண்டன், கதிரேசன், பாபு மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் அனிதா செல்வராஜ், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் தங்கவேல், இளங்கோவன், முருகன், தென்றல் செந்தில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கோபால் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

-துல்கர்னி உடுமலை.

Comments