ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது..!! வீட்டுக்கே வந்து குத்துவோம்..!! தமிழக அரசு அதிரடி..!!

  -MMH

   இந்தியாவிலேயே சிறந்த தொழில் நகரங்களில் ஒன்றாக விளங்குவது திருப்பூர் மாவட்டம். இங்கு பல ஊர்களிலிருந்து வந்த மக்கள் தங்கி தொழில் மற்றும் வேலை செய்து வருகின்றனர். தொழில் நகரமான திருப்பூரில் மக்கள் நடமாட்டம் எப்போதும் அதிகமாகவும் மக்கள் கும்பல் தென்பட்டு கொண்டே இருக்கும்.

ஆகவே அங்கு கொரோனா பரவலை கட்டுபடுத்த அரசு பல நெறி முறைகளை கையாண்டு வருகிறது. அதனடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து உள்ளூர் வாசிகளுக்கும் தொழில் மற்றும் வேலை செய்பவர்கள் என்று அனைத்து தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி முழுமையாக செலுத்திவிட வேண்டும் என்று அரசு கட்டளை பிறப்பித்துள்ளது.

அரசு கட்டளைக்கிணங்க திருப்பூர் மாநகராட்சி கணக்கெடுப்பின் மூலம் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத மக்களிடம் வீடு வீடாக சென்று  கொரோனா வின் நோயைப் பற்றி  விழிப்புணர்வு ஏற்படுத்தி, மேலும் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி தடுப்பு ஊசியை செலுத்தி கொள்ளாதவர்களுக்கு உடனடியாக அங்கேயே தடுப்பூசியும் செலுத்தி விடுகின்றனர் .

தமிழக அரசின் இந்த நடவடிக்கை மக்களை வெகுவாக கவர்ந்து உள்ளதாகவும் பொதுமக்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் மக்கள் மீது அக்கறை கொண்ட அரசு  என்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-பாஷா, திருப்பூர்.

Comments