துர்நாற்றம் வீசும் குப்பைக்கிடங்கு.!! மது குடிகாரர்களின் சேட்டை, சகித்துக் கொள்ள முடியாமல் மக்கள் அவதி....!!!

 -MMH

   கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம், சுப்பிரமணிய பாளையத்தில் அமைந்துள்ளது டீச்சர்ஸ் ட காலனி. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருந்து வருகின்றனர்.

காலனி அருகில் மயானம் ஒன்று இருப்பதாகவும், அங்கு குப்பைகளை கொட்டுவதினால் பயங்கரமான துர்நாற்றம் வீசுவதாக அங்கு வசிக்கும் மக்கள் குறை கூறி  வருகின்றனர் 

மேலும் மயானத்திற்கு அருகில் உள்ள மின் விளக்கு எரியும் மின்கம்பத்தையும் காணவில்லை, சாலை பராமரிப்பின்றி புதர்கள் மண்டி கிடப்பதாகவும், அதிக வாகன போக்குவதற்கும் இருக்கும்  இச்சாலையில் பயணிகள் அவதிக்குள்ளாகியே சாலையை கடந்து செல்ல வேண்டியுள்ளதாக மக்கள் தங்கள் புகார்களை எழுப்பி வருகின்றனர்

அதுமட்டுமின்றி அந்த முட்புதர் பகுதியில் மது குடியர்கள் அங்கு கூடி மது அருந்தி மது பாட்டில்களையும் உணவு மீதத்தையும் அந்த இடத்தில் தூக்கி வீசி விடுகின்றனர். இதனால் பெரும் அசுத்தம் அங்கு நிலவுகிறது.

இதை அரசு அதிகாரிகள் மக்கள் புகார் கொடுத்தும்  கண்டுகொள்ளாமல் உள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

இனிமேலாவது அதிகாரிகள்  தாமதிக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவ்விடத்தை சுத்தம் செய்து பொதுமக்கள் அவதி, அச்சம் இன்றி  நடமாடக் கூடிய பகுதியாக மாற்ற வேண்டுமென்று கோரிக்கை வைக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-திவ்ய குமார்.

Comments