மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்யாவை, ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் சந்தித்தார்!!

  -MMH

    கோவை விமான நிலைய விரிவாக்கப்பணிகளை விரைவாக மேற்கொண்டு, சர்வதேச விமானங்களை அதிகளவில் இயக்க வேண்டும்' என்று மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்யாவிடம், ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் முறையிட்டுள்ளார்.

டில்லியில், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யாவை ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்(ஏ.இ.பி.சி.,) தலைவர் சக்திவேல் சந்தித்தார்.

அமைச்சரிடம், சக்திவேல் முன்வைத்த கோரிக்கைகள்:கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம், நீலகிரி மாவட்டங்கள், ஆற்றல்மிகு தொழில் மையங்களாக மாறியுள்ளன. ஜவுளி, பொறியியல் தொழில் துறைகள் வளர்ச்சி பெற்றுள்ளன. மாநில உள்நாட்டு உற்பத்தியில், 62 சதவீத பங்களிப்பு, இந்த மாவட்டங்களை சார்ந்துள்ளது. அதிகளவு பொருட்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கோவை விமானநிலைய விரிவாக்கத்துக்காக நிலம் ஒப்படைக்கப்பட்ட உடன், விரிவாக்க பணிகளை துவக்கவேண்டும். அதிகளவில் சர்வதேச விமானங்களை இயக்க வேண்டும். இவ்வாறு, அவர் கோரிக்கை விடுத்தார்.தேவைகளை பூர்த்தி செய்துதருவதாக, அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-சுரேந்தர்.

Comments