கோபாலபுரம் -> மீனாட்சிபுரம் செல்லும் சாலையில் பயணிக்க முடியாமல் தவிக்கும் வாகன ஓட்டிகள்!!

  -MMH

   பொள்ளாச்சி: தமிழக-கேரள எல்லைப் பகுதியான கோபாலபுரத்தில் இருந்து மீனாட்சிபுரம் செல்லும் சாலையில் மூலத்துறை அணைக்கட்டுப் பகுதியிலிருந்து ஆற்றுப் பாலம் வரை உள்ள சாலை குண்டும் குழியுமாக  மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

இவ் வழித்தடத்தில் பயணிக்கும் பொழுது இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து சிறு காயங்களுடன் எழுந்து சென்று வருகின்றனர்.  நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் இந்த சாலையை கால தாமதம் செய்யாமல் சீரமைத்து தர வேண்டும் என்கின்றனர் இப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும்.

நாளைய வரலாறு செய்திக்காக,

தமிழகத் துணை தலைமை நிருபர்,

-M.சுரேஷ்குமார்.

Comments