சென்னை தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்!!

     -MMH

சென்னையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் பல்லவன் சாலையில் உள்ள மாநகர போக்குவரத்து அலுவலகம் முன்பு நிலுவையில் உள்ள தங்கள் அகவிலைப்படி உயர்வை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் நடத்தினர். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேல் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, வாரிசுதாரர்களுக்கு ஓய்வூதியத் தொகை, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் போன்றவைகள்  நிலுவையில் உள்ளது. இதை வலியுறுத்தி பலவிதமான போராட்டங்கள் அரசு போக்குவரத்து ஊழியர் ஆல் நடத்தப்பட்டது, அரசுடன் பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டன.

இருப்பினும் அவர்களுடைய  கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. தற்போது ஆட்சி மாறியுள்ள நிலையில் இந்த அரசாவது போக்குவரத்து ஊழியர்களுக்கு உரிய நியாயம் வழங்கும் என்று எதிர்பார்த்த சூழ்நிலையில் சட்டசபை கூட்டத்தொடரில் நிலுவைத் தொகைகள் ஓராண்டுக்கு ரத்து செய்யப்படுவதாக நிதியமைச்சர் அறிவித்தது அரசு ஊழியர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. தற்போது இருக்கும் விலைவாசி உயர்வு, கல்வி மருத்துவ செலவினங்கள் போன்ற  செலவீனங்களை  எதிர்கொள்ள தாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் ஆகவே அரசு தங்கள் போராட்டத்தை உடனே கவனத்தில் எடுத்துக்கொண்டு உரிய நீதி வழங்க வேண்டுமென்று அரசு போக்குவரத்து ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

-அப்துல் ரஹீம், திருவல்லிக்கேணி.

Comments