கண்களைக் கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டும் காரைக்குடி சிறுமி!

  -MMH

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பள்ளிவாசல் பகுதியில் வசித்து வருபவர் மகமுதா ரிஃபைனா.

12 வயது சிறுமியான ரிஃபைனா, இருகண்களையும் துணியால் கட்டிக்கொண்டு எதிரில் இருப்பவர்கள் அணிந்திருக்கும் ஆடைகளின் வண்ணங்கள், ரூபாய் நோட்டுகளின் மதிப்பு, அவற்றின் எண்கள் உட்பட அனைத்தையும் மனக்கண் மூலம் கண்டறியும் "மிட் பிரைன் ஆக்டிவிட்டி" பயிற்சியில் சிறந்து விளங்குகிறார்.

இந்தப் பயிற்சியின் அடுத்த நிலையான கண்களைக் கட்டிக்கொண்டு மிதிவண்டி ஓட்டும் திறமையையும் பெற்று, அனைவரையும் அசத்தி வருகிறார். 

காரைக்குடி லயன்ஸ் கிளப் மூலம் 2020-2021 ஆண்டிற்கான "மிட் பிரைன் ஆக்டிவிட்டி அவார்டு" வழங்கிச் சிறப்பிக்கப் பெற்றுள்ளார்.

சிறுமி மகமுதா, "இரு கண்களைக் கட்டினாலும் மிட் பிரைன் ஆக்டிவிடி மூலம் பயிற்சி பெற்றால் மூன்றாம் கண்ணான மனக்கண் மூலமாக அனைத்தையும் செய்யலாம்" என்றும், "இந்தச் சாதனையை பொதுவெளியில் நிகழ்த்தி, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறவேண்டும் என்பதே எனது லட்சியம்" என்றும் தெரிவித்தார்.

சிறுமி மகமுதா ரிஃபைனாவின் இந்த அசாத்திய திறமைகளைக்கண்டு காரைக்குடி பொதுமக்கள் அவரை வெகுவாகப் பாராட்டி வாழ்த்திவருகின்றனர்.

அவர் கின்னஸ் சாதனை நிகழ்த்த நாளைய வரலாறு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

- அப்துல்சலாம் திருப்பத்தூர்.

Comments