தக்காளி விலை உயர்வு!! விவசாயிகள் மகிழ்ச்சி!!

 -MMH

கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கிணத்துக்கடவில் தினசரி காய்கறி சந்தை உள்ளது. 

இந்த சந்தைக்கு தக்காளி உள்ளிட்ட காய்கறி பொருட்களை கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதியில் வசிக்கும் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகிறார்கள்.கடந்த வாரம் இந்த சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.9-க்கு ஏலம் போனது.கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் தக்காளி வரத்து குறைவாக இருந்தது.அதன்படி  சந்தைக்கு 3 டன் தக்காளியே வந்து இருந்தது.

இதனால் அதன் விலை கிடுகிடுவென கிலோவுக்கு ரூ.4 உயர்ந்து ரூ.13-க்கு விற்பனையானது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments