அரசமர பிரதட்சணம்!!

     -MMH

நம் முன்னோர்கள் பழங்காலத்திலிருந்தே மரங்களை தெய்வமாக வழிபட்டு வந்தனர். வழிபாட்டில் ஆல், அரசு, வேம்பு, என பல மரங்களுக்கு முக்கிய இடமுண்டு அந்த வகையில் அரச மரத்திற்குச் சிறப்பான இடமுண்டு இம்மரத்தை ராஜவிருட்சம் எனவும் அழைப்பர். அரசமரத்தின் வேர் பகுதியில் பிரம்மனும், நடுவில் திருமாலும், உச்சியில் ஈசனும் அருள்புரிவதாக புராணங்கள் கூறுகின்றன.  கண்ணனும் கீதையில் மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன் என்று கூறுகிறார்.

கெளதமபுத்தர் ஞானம் பெற்று புத்தபிரானாக உருவெடுத்தது போதி மரம் என்று குறிப்பிடப்படும் அரசமரத்தடியில்  தான் அரச மரத்தில் ஒருவித மின் ஆற்றல்கள் பாசிடிவ் எனர்ஜி அளிக்கக் கூடிய மின் ஆற்றல்கள் இருக்கின்றன. மேலும் ஹோமங்களில் நாம் போடும் பொருட்களில் அரசு சமித்து ( குச்சி ) அவசியமாக இடம் பெறுகிறது. ஓர் அரச மரத்தை வைத்தால் சந்ததியினர் அனைவருக்கும் சொர்க்கத்தில் இடமுண்டு என்று சொல்வதுண்டு அரசமரத்தைச் சுற்றுவதால் குழந்தைபாக்கியம் ஏற்படும் இதன் பலன் கருதியே நம் முன்னோர் அரச மர பிரதட்சணத்தை இறைவழிபாட்டோடு இணைத்தனர். அரச மரங்களின் அடியில் பிள்ளையார் சிலையை வைத்து பிள்ளையாரை வழிபடும்போது, அரச மரத்தைச் சுற்றி வரவும் அதன் மூலம் அரச மரக்காற்றை சுவாசித்து பெண்கள் கருப்பை கோளாறுகளிலிருந்து விடுபடவும் வழிவகுத்தனர்.

மனதிற்கு காரகனாக விளங்கும் சந்திரனின் சாரம் பெற்ற திங்கட்கிழமையை இதற்குத் தேர்ந்தெடுத்து அன்று அரசமரத்தை சுற்றி வரச் செய்தனர். அரசமரத்தை காலைவேளையில்தான் சுற்ற வேண்டும் இதனால் நம் உடல் நோய்கள் நீங்கி பூரண ஆரோக்கியம் கிடைக்கும் அரசமரத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களும் வசிக்கின்றனர். அரசமரத்தைத் தொட்டாலே பாபங்கள் விலகுவதாகப் புராணங்கள் சொல்கின்றன. ஒவ்வொரு பிரதட்சணம் முடிந்ததும் நமஸ்கரிப்பது சிறப்பானது. அரசமரத்தை வலம் வந்தால் மும்மூர்த்திகளையும் வழிபட்ட புண்ணியம் உண்டாகும். அரச மரத்தை சுற்றி வழிபாடு செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை நாளை  பார்க்கலாம்.

ஆன்மீக சிந்தனையாளர் திருமதி,

-சுகன்யா, சுரேஷ்.

Comments