வீணாகும் குடிநீர்!! - கண்டுகொள்ளாத குடிநீர் வாரிய அதிகாரிகள்!!

  -MMH

   கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதிகளில் வரக்கூடிய குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. அப்பகுதியில் சாலை பணியாளர்கள் சரியாக செய்வதில்லை என்று குறிக்கோள் பின்பு அவ்வழியாக வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. 

வால்பாறைக்கு வரும் வழியே நாடுமழை என்ற பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த குழாய் வழியாக 5 லட்சத்துக்கும் மேலான மக்கள் குடிப்பதற்கு உண்டான குடிநீர் செல்கிறது.

வால்பாறை கொப்பர் டி காலனி, காமராஜ் நகர், துளசி நகர், அண்ணா நகர், எம்ஜிஆர் நகர், ராஜீவ் காந்தி நகர், காந்திநகர், கக்கன் காலனி, வாழைத்தோட்டம், சிறுவர் பூங்கா ஆகிய பகுதிகளில் இந்த குடிநீர் தான் செல்கின்றது. இதை பலமுறை தகவல்களை தெரிவித்தும், வால்பாறை நகராட்சி அலுவலக அதிகாரிகளிடம் கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை.

ஆகையால் அப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அவ்வழியே செல்லும் போது வாகனங்களுக்கு இடையூறாகவும் உள்ளது. அவ்வழி சரியாக சீரமைக்காத காரணத்தினால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. இதை கருத்தில் கொண்டு குடிநீர் வாரிய அதிகாரிகள் சரி செய்யுமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-திவ்ய குமார், நடராஜ், வால்பாறை.

Comments