பொள்ளாச்சி நீதிமன்றத்தில் நடந்தது என்ன..?!!

 -MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சார்பு நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் மரத்தின் மீது ஏறி கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாக பொதுமக்களிடையும், போலீசாரிடமும் தெரிவித்தும் மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டார்.

தகவல் அறிந்த போலீசார் மரத்தின் மீதிருந்த நபரை கீழே இறங்கி வரும்படி அறிவுறுத்திய நிலையில், தொடர்ந்து இறங்க மறுத்து வந்தார்.உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு துறையினர் கீழே வலை விரித்து அந்த நபரை காப்பாற்ற முயற்சி செய்தனர்.

ஆனால் திடீரென மரத்தின் மீதிருந்த நபர் தான் வைத்திருந்த துண்டின் மூலம் மரத்தின் கிளையில் தூக்கிட்ட நிலையில் மரத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். உடனடியாக விரைந்து செயல்பட்ட தீயணைப்பு துறையினர் மரத்தின் மீது ஏறி கழுத்தில் உள்ள துண்டினை அறுத்து கீழே இருந்த வலையில் விழச்செய்து காப்பாற்றினர்.

தொடர்ந்து தற்கொலைக்கு முயன்ற நபரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Comments