இரவு நேர திருடர்கள் ஜோடி போட்டு வாகன திருட்டு.! வெற்றி வேலுக்கு, கிடைக்குமா இனி மனசாந்தி அதிகாரிகளின் பிடியில் மாற்றிய கே டி ஜோடி..!!

 

-MMH

      கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடிய தம்பதிகள், சிசிடிவி காட்சியின் மூலம் போலீசில் பிடிபட்டனர். கோவை மாநகரில் பல இடங்களில் இரவு நேரங்களில் அடிக்கடி வாகன திருடு போவதாக போலீசாருக்கு பல புகார்கள் வந்தது. புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைத்து போலீசார் வாகன சோதனை மட்டும் சிசிடிவி ஆய்வின் மூலம்  திருடு போன வாகனங்களை தேடி வந்தனர் இன்னிலையில் கடந்த 30 8 2021 அன்று இரவு சிங்காநல்லூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஒரு பகுதி சிசிடிவி கேமராவில் இரவு நேரத்தில்  ஒரு வீட்டின் அருகே  ஆண் ஒருவர்  இரு சக்கர வாகனம் ஒன்றை தள்ளி சென்றதும் அவருடன் பெண்ணொருவர் உடன் இருந்ததும்  சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

இந்த  சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரணையை முடிகிவிட்ட சிங்காநல்லூர் போலீசார் தனிப்படை போலீசார் உதவியோடு நேற்று சிசிடிவி காட்சியில் பதிவான இருவரையும் பிடித்து விசாரணை நடத்தியதில்  தர்மபுரியைச் சேர்ந்த வெற்றிவேல் அவரது  மனைவி சாந்தி இவர்கள் இருவரும் இணைந்து  இருசக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது. இவர்களை கைது செய்த போலீசார் 2 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்ததோடு  விசாரணை நடத்தி வருகின்றன.

ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னாடி ஒரு பெண் இருப்பாள் ' என்ற இப்பழமொழியின் சிறப்பு  இவர்களுக்குப் பொருந்துமோ?? என்று விழி பிதிங்கி நிற்கின்றனர் பொதுமக்கள்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-முஹம்மது சாதிக் அலி.

Comments